நெல்லை மாவட்டம், மாஞ்சோலையில் சிகிச்சையளிக்க மருத்துவமனை இல்லாததால் உடல்நலம் குன்றிய முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணிமுத்தாறு பேரூராட்சிக்கு மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, காக்கச்சி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதுவரை அப்பகுதியில் அரசு எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தராததால், உடல் நலம் குன்றிய முதியவர் போதிய சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்தார்.