சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன், மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.