சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க குண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் வீடியோ வெளியாகி உள்ளது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கு எதிராக நீண்ட காலமாக ஆயுத மோதலில் ஈடுபட்டு வந்த கிளர்ச்சியாளர்கள் நாட்டின் பெரும்பகுதிகளைக் கைப்பற்றி உள்ளனர். இதையடுத்து 50 ஆண்டு கால ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அதிபர் ஆசாத் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். இந்நிலையில், சிரியா மீது இஸ்ரேல் நிலநடுக்க வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின்போது சிரியாவில் ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளி பூஜ்ஜியம் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.