மார்கழி மாத பிறப்பையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
சபரிமலையில் கடந்த மாதம் 16ம் தேதி மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலம் தொடங்கியது. இதையடுத்து சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.
நாள்தோறும் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சபரிமலையில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் முறையாக மேற்கொண்டு வருவதால் பக்தர்கள் சிரமமின்றி ஐயப்பனை தரிசித்து செல்கின்றனர்.