தூத்துக்குடி ஆறுமுகநேரி பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் உள்ள ஆறுமுகநேரியில் தினமும் 14 முறை ரயில்வே கேட் மூடப்படுகிறது.
இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அத்துடன் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்தில் நெரிசலில் சிக்கிக் கொள்வதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.
எனவே அப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள அவர்கள், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் எனவும் எச்சரித்துள்ளனர்.