தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகமரை கீழ்க்காலனியில் , சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வழங்கப்படாததால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி, நாகமரை சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.