கன்னியாகுமரியில் உள்ள அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குழித்துறை நீதிமன்றம் அருகே அரசு நடுநிலை பள்ளி உள்ளது. அங்கு மதிய உணவின்போது மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல பெருந்தெரு அரசு பள்ளியிலும் அழுகிய முட்டை வழங்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக 2 பள்ளிகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் ஏராளமான அழுகிய முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.