வனுவாட்டு தீவுகளில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
பசிபிக் பெருங்கடலின் வனுவாட்டு தீவுகள் அருகே 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் போர்ட் விலாவிற்கு மேற்கில் 30 கிலோ மீட்டர் தொலைவிலும் 57 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் பதிவானது.
இதன் காரணமாக ஏராளமான கட்டடங்களில் இடிந்து சேதமடைந்தன. அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளின் தூதரக கட்டடங்களும் பலத்த சேதத்தை சந்தித்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி 14 பேர் பலியாகியுள்ளனர். . 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.