சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுத்தபோது ஓட்டுநரின் கவனக்குறைவால் கார் ஒன்று, 85 அடி ஆழ கடலுக்குள் கவிழுந்து விழுந்தது.
சென்னை கொடுங்கையூரை அடுத்த மூலக்கடையை சேர்ந்த முகமது ஷாகி என்பவர் துறைமுகத்தில் வாடகை கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடலோர காவல் படையில் பணிபுரியும் ஜோகேந்திர காண்டா என்பவரை துறைமுகத்திற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
ஜவகர் டக் என்ற பகுதியில் காரை ரிவர்ஸ் எடுத்தபோது கார் கடலுக்குள் கவிழ்ந்தது. சுதாகரித்துக்கொண்ட கடலோர காவல்ப்படை வீரர் ஜோகேந்திர காண்டா கார் மூழ்கும் முன் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த நிலையில், ஓட்டுநர் முகமது ஷாகி காருடன் கடலுக்குள் மூழ்கியுள்ளார். அவரை தேடும் பணியில் துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.