ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் பாஜக எம்.பி. காயமடைந்த நிலையில், இதுதொடர்பாக அவரிடம் பாஜகவினர் முறையிட்டபோது அவர் அலட்சியமாக பதிலளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற நுழைவு வாயிலில் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரை பாஜக எம்.பி. சாரங்கி மீது ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக சக எம்.பி.க்கள் அவரை இருக்கையில் அமரவைத்தனர்.
அங்கு சர்வசாதாரணமாக வந்த ராகுல் காந்தியிடம் பாஜகவினர் முறையிட்டபோது, அவர் ஏதும் தெரியாதது போல தலையசைத்து விட்டு அங்கிருந்து நடையைக் கட்டினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.