எல்லையை காப்பதில் சசாஸ்திர சீமா பால் அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சசாஸ்திர சீமா பால் அமைப்பின் 61-ஆவது உதய தினத்தையொட்டி, மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் நடைபெற்ற விழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லையைக் காப்பதிலும், பீகார், ஜார்க்கண்டில் நக்சலைட்டுகளின் கொட்டத்தை ஒடுக்குவதிலும் சசாஸ்திர சீமா பால் அமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக பாராட்டு தெரிவித்தார்.
எல்லையில் கண்காணிப்பு பணியில் இருக்கும்போது தேச விரோத சக்திகளைக் கண்டறிந்தால், உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்குமாறு சசாஸ்திர சீமா பால் அமைப்பினரிடம் அமித் ஷா கேட்டுக்கொண்டார்.