சாதி, மதம் ஆகியவற்றை கடந்து இயேசு அனைவருக்கும் பொதுவானவர் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய ஆளுநர், இயேசு கூறிய வார்த்தைகள் காந்தியின் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியாக கூறினார். மேலும், சாதி, மதம் கடந்து இயேசு அனைவருக்கும் பொதுவானவர் எனக்கூறிய ஆளுநர், அனைவரும் இயேசுவின் கருத்துக்களை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.