கன்னியாகுமரி தக்கலை அருகே இந்து வழிபாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கிறிஸ்தவ வழிபாட்டு தலம் அமைக்கப்படுவதாக பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர் ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் பகுதியில் இசக்கியம்மன் கோயில், சுடலை ஆண்டவர் உள்ளிட்ட கோயில்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில், அங்கு புதிய தேவாலயம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள பாரத ஹிந்து மகா சபா அமைப்பினர், இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.