10 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன போயிங் விமானத்தை மீண்டும் தேட அமெரிக்க நிறுவனத்துடன் மலேசியா ஒப்பந்தம் செய்துள்ளது.
2014 மார்ச் 8-ம் தேதி கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்ற மலேசியாவின் எம்எச்- 370 போயிங் விமானம் மாயமானது. விமானத்தை தேடும் பணியில் மலேசியா, ஆஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்ட நிலையில், 2018-ம் ஆண்டு விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடல் தீவுகளில் கரை ஒதுங்கிய நிலையில், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்காவை சேர்ந்த ஓஷன் இன்பினிட்டி என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வரும் ஜனவரி மாதம் தேடும் பணி தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.