உகாண்டா நாட்டில் டிங்கா டிங்கா என்ற புதுவிதமான வைரஸ் காய்ச்சல் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
உகாண்டாவில் உள்ள புண்டிபுக்யோ என்ற மாவட்டத்தில் டிங்கா டிங்கா என்ற காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடல் நடுக்கம் காரணமாக தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருக்கின்றனர்.
மாவட்டம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த அரியவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளை குறிவைத்து இந்த வைரஸ் தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்தில் குணமாகி விடுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நடனமாடிக் கொண்டே இருப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.