விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியை சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேச சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்றம், சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆஜராகினர்.அப்போது, மத்தியஸ்தர் நேரில் ஆஜராகி, இருவருக்கும் சமரச பேச்சுவார்த்தை முடியவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து, சமரச தீர்வு மையத்தில் மனம் விட்டு பேசும்படி ஜெயம்ரவி மற்றும் ஆர்த்திக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.