மின் விபத்துகளால் உயிரிழப்பவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி மின் வாரியம் அறிவித்துள்ளது.
புயல், கனமழை போன்ற காலங்களில் மின்கசிவு ஏற்பட்டும், மின் கம்பி அறுந்து விழுந்தும் விபத்துகள் நிகழ்கின்றன.
இதுபோன்று பொது இடங்களில் ஏற்படும் மின் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் குடும்பத்தினர்களுக்கு மின் வாரியம் சார்பில் 5 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படுகிறது. அதனை தற்போது 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாகவும் நிவாரணம் உயர்த்தப்பட்டுள்ளது. உயிரிழந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் 25 ரூபாய் நிவாரணத் தொகையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.