இன்று பிறந்த நாள் கொண்டாடும் பாஜக சிந்தனையாளர் பிரிவு மாநிலத் தலைவர் ஷெல்விக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “இன்று பிறந்த நாள் கொண்டாடும் தமிழக சிந்தனையாளர் பிரிவின் மாநிலத் தலைவர் சகோதரர் ஷெல்விக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறிவுசார் கூட்டங்களை நடத்தி, ஆக்கப்பூர்வமான சிந்தனை கொண்டவர்களை ஒருங்கிணைத்து, அதன் மூலம் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பலனளிக்கும் வகையில் தொடர்ந்து செயலாற்றி வரும் சகோதரர் ஷெல்வி நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து சமூகப் பணிகளை மேற்கொள்ள இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என அண்ணாமலை கூறியுள்ளார்.