ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த குழுக்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இந்த நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள், ஆயுத கிடங்குகள், கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.