நத்தம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி தம்பதியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பாலப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், அவரது மனைவி சுமதியுடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கோமணம்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படுகாயமடைந்த ராஜேந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.