கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே யானை தந்தத்தை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஒசூர் வனப்பகுதியில், மர்ம நபர்கள் சிலர் யானையை வேட்டையாடி தந்தத்தை விற்பனை செய்வதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வாகன சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், இருசக்கர வாகனங்களில் கடத்தி வரப்பட்ட இரு தந்தங்களை பறிமுதல் செய்ததோடு, கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்தனர். தலைமறைவான மேலும் இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.