திருநெல்வேலியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள் போலீஸ் பாதுகாப்புடன் எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட மருத்துவக் கழிவுகள், திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டன. இந்த சம்பவம் பூதாகரமாக வெடித்த நிலையில், கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களில் கேரள அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கழிவுகள் அனைத்தும் 18 லாரிகள் மூலம் அகற்றப்பட்ட நிலையில், அவை அனைத்தும் போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.