கோவை மேட்டுப்பாளையம் அருகே பாகுபலி காட்டு யானை சாலையை வழிமறித்து நின்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாக உள்ளது. இந்நிலையில், பாகுபலி காட்டு யானை சாலையின் நடுவே உலா வந்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள், வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.