சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சாயக் கண்மாயில் இருந்து அருவி போல் வெளியேறிய நீரில் மக்கள் உற்சாக குளியலிட்டனர்.
காரைக்குடி அடுத்த சுட்டி நெல்லிபட்டி கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் கண்மாய் நீரம்பியது. இதனால் கழுங்கு பகுதியில் அருவி போல் நீர் வெளியேறி வருகிறது.
இதை அறிந்த சுற்றுவட்டார பகுதி மக்கள், குடும்பத்தினருடன் கண்மாய்க்கு வந்து உற்சாக குளியலிட்டனர்.