எம்.பிக்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
நடப்பாண்டுக்கான சௌதரி சரண் சிங் விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விருதுகளை குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், எம்.பிக்கள் பொறுப்புடைமை மிக்கவர்களாக இல்லாவிட்டால், எதற்காக நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டோம் என்பதை மக்களே யோசிக்க வைப்பார்கள் என கூறினார்.