தருமபுரி மாவட்டம் கூத்தப்பாடி திரௌபதி அம்மன் கோயிலில் உண்டியலை உடைக்க முயன்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கூத்தப்பாடி கிராமத்தில் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு இரவு 12 மணியளவில் வந்த மர்ம நபர்கள், கடப்பாரையை கொண்டு உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர்.
அப்போது போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், உண்டியல் உடைக்கப்படும் சத்தம் கேட்டு அவர்கள் கோயிலுக்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வருவதை அறிந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.