ஸ்ரீவைகுண்டம் அருகே நள்ளிரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அனாவரதநல்லூரை சேர்ந்த மகாராஜன் என்பவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கட்டிட தொழிலாளியான மகாராஜன், நேற்றிரவு வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
அப்போது, காட்டுப் பகுதியில் மகாராஜன் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். அதில், சில தினங்களுக்கு முன் ஊர் கோயில் அருகே மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் மகாராஜன் கொல்லப்பட்டது தெரியவந்தது. மேலும், கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.