நெல்லையில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணி இரண்டாவது நாளாக நடைபெற்றது.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில், கழிவுகளை அள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் சாஷ்ஷி, கேரள சுகாதாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இந்த பணிகளை மேற்கொண்டனர். ஏற்கனவே 18 லாரிகளில் மருத்துவக் கழிவுகள் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், 2வது நாளாக கழிவுகளை அள்ளும் பணி நடைபெறுகிறது.