தமிழகத்தில் திமுக கூட்டணி விரைவில் முறியும் என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
மத்திய அரசின் ஆர்மிகு மாவட்டங்கள் திட்டத்தை ஆய்வு செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சென்ற அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழகத்தில் திமுக ஏழாவது முறையாக ஆட்சியமைக்கப் போவதாக கூறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் பதிலளித்தார்.
அந்த வகையில், தமிழகத்தை திமுக அரசு சிதைத்துவிட்டதாக கூறிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் எவ்வித வளர்ச்சியும் ஏற்படவில்லை என குற்றம்சாட்டினார்.
திமுக ஆட்சியில் தமிழகம் பின்தங்கிவிட்டதாகவும், விரைவில் திமுக கூட்டணி முறியும் என்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் குறிப்பிட்டார்.