சிதம்பரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட கொத்தட்டை சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி, அனைத்து கட்சி மற்றும் சங்கங்கள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம், நாகப்பட்டினம் இடையே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே கொத்தட்டை அருகில் புதிதாக சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து கொத்தட்டை சுங்கச்சாவடியை அனைத்து கட்சியினரும், பல்வேறு சங்கத்தினரும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.