அரவிந்த் கெஜ்ரிவால் ஏழைகளின் உரிமைகளை பறிக்கும் வேலையை செய்திருக்கிறார் என பாஜக எம்.பி அனுராக் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி மக்களைப் பொறுத்தவரையில் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றவாளி என கூறினார்.
அசுத்தமான நீரால் 22 லட்சம் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். மேலும், டெல்லி பெண்கள் ஒரு துளி தண்ணீருக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் எனவும் அனுராக் தாகூர் வேதனை தெரிவித்துள்ளார்.