பிரபல பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும் தொழிலதிபர் வெங்கட தத்தா சாய்க்கும் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வெங்கட தத்தா சாயும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், அவர்களது திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கஜேந்திர சிங் ஷெகாவத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.