2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும், டிசம்பர் மாத இறுதிக்குள் போட்டி நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவை கூட்டி விதிகள் மற்றும் நடைமுறைகளை வகுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை அடிப்பதோ, துன்புறுத்துவதோ கூடாது; காளைகள் களத்தில் நுழைவது முதல் அனைத்தையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போட்டி நடத்த விரும்புவோர், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் , அரசால் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர, வேறு இடத்தில் நடத்த அனுமதிக்க கூடாது எனவும் தமிழ்நாடு அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.