கஜகஸ்தானின் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்தனர்.
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், 72 பயணிகளுடன் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து, குரோசினிக்கு சென்றுள்ளது. குரோசினியில் பனிமூட்டம் காரணமாக விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஜகஸ்தானின் அக்தாவ் நகருக்கு அருகே சென்றபோது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அக்தாவ் விமான நிலையத்தை சில முறைகள் வானில் வட்டமிட்ட நிலையில், அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியதில் விமானம் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் சில பயணிகள் மட்டும் காயத்துடன் உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.