கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை அல்லு அர்ஜுனின் தந்தை நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சிறுவன் குணமடைந்து வருவதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்றும், சிறுவனின் குடும்பத்துக்கும் ஆதரவாக 2 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன்படி, அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பாளர்கள் வழங்கிய 50 லட்சம் ரூபாயும், இயக்குனர் 50 லட்சம் ரூபாயும் என மொத்தம் 2 கோடி ரூபாயை தெலுங்கானா திரைப்பட மேம்பாட்டுக் கழகத் தலைவர் தில் ராஜுவிடம் ஒப்படைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.