ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில், தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், சுனாமியில் உயிர் நீர்த்தவர்களுக்கு, 20 -வது ஆண்டாக மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, நடைபெற்ற அமைதி பேரணியில், ஆயிரக்கணக்கான மீனவ மக்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த உயிர்நீர்த்தவர்கள் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். மேலும், கடற்கரையில் பால் ஊற்றியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகன், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், மீனவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.