பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த வழக்கில் கைதான சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் என்பவரைக் காதலித்த சத்யபிரியா, பெற்றோர் எதிர்ப்பால் அவருடன் பேசுவதை நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், 2022 அக்டோபர் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன்பு தள்ளிவிட்டுக் கொலை செய்தார். இதுதொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.
தற்போது அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில், அதன் அடிப்படையில் சதீஷை குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்கள் வரும் 30-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார்.