தமிழக காவல்துறையில் 44 டிஎஸ்பிகளுக்கு ADSP-யாக பதவி உயர்வு அளித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
தீவிரவாத தடுப்புப் பிரிவின் டிஎஸ்பி நல்லதுரை, கடலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு ஏடிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பியாக மதியழகன், ராமநாதபுரம் மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடிஎஸ்பியாக ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், பல்வேறு பிரிவுகளில் டிஎஸ்பியாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கும் ஏடிஎஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.