கிங் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
சீனாவில் கிங் கோப்பைக்கான சர்வதேச பேட்மிண்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. உலக தர வரிசையில் 12-ம் இடம் வகிக்கும் சென், உலக தர வரிசையில் 17-ம் இடம் வகிக்கும் ஹாங்காங்கின் ஆங்கஸ் இங் கா லாங் என்பவரை எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியில், 10 க்கு 21, 21 க்கு 13, 21 க்கு 13 என்ற செட் கணக்கில் லாங்கை, சென் வீழ்த்தினார். இதனை தொடர்ந்து, இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் சீன வீரரான ஹூ ஜே ஆன் என்பவரைம் சென் எதிர்கொள்ள உள்ளார்.