காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக கூறி தென்காசியை சேர்ந்த முதல்நிலை காவலர் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல்நிலையத்தில் பிரபாகரன் என்பவர் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்தார். இவர் முறையான ஆவணங்கள் இல்லாமல் மணல் மற்றும் ஜல்லி கற்களை ஏற்றிவந்த டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதை தொடர்ந்து மர்ம நபர்கள் இவருக்கு கொலை மிரட்டல்விடுத்த நிலையில், கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என உயர் அதிகாரிகளிடம் அவர் புகார் அளித்துள்ளார்.தொடர்ந்து புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசின் முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ள பிரபாகரன், காவல்துறையில் பணியாற்றி வருவது தனக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.