நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா காட்டு யானை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பந்தலூர், சேரம்பாடி, சேரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் புல்லட் ராஜா என்ற காட்டு யானை வெகு நாட்களாக உலா வந்தது. 45க்கும் மேற்பட்ட வீடுகளை அந்த யானை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாயினர்.
இதையடுத்து, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, புல்லட் ராஜாவை 2 டோஸ் மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் நேற்று பிடித்தனர்.
பிடிபட்ட யானை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், யானையின் செயல்பாடுகளை முழுமையான அறிந்த பின் வனப்பகுதிக்குள் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.