உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலகுவதாக மேக்னஸ் கார்ல்சன் அறிவித்துள்ளார்.
உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில், நார்வேவைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் கலந்து கொண்டார். இந்நிலையில் 2-ம் நாள் போட்டிக்கு மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து வந்தார்.
இது சர்வதேச செஸ் கூட்டமைப்பு விதிமுறையை மீறும் செயலாகும். உடையை மாற்றும்படி போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்திய பிறகும், மேக்னஸ் கார்ல்சன் அதனை கேட்கவில்லை. இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தொடரில் இருந்து விலகுவதாக கார்ல்சன் அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.