சேலம் புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்ற போலீஸ் ஏட்டை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
ஓமலூர் டிஎஸ்பி அலுவலகத்தில் உள்ள குற்றப்பிரிவு தனிப்படையில், கலைச்செல்வன் என்பவர் பணியாற்றி வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட போலீஸ் ஏட்டு கலைச்செல்வன், கடந்த 26ஆம் தேதி சேலம் புதிய பேருந்து நிலையத்தில், கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.
இதுகுறித்து பெண் அளித்த புகாரின் பேரில், மது போதையில் இருந்த ஏட்டு கலைச்செல்வனை பள்ளிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், ஏட்டு கலைச்செல்வன் ரகளை செய்த வீடியோவை பார்த்த மாவட்ட எஸ்பி கௌதம் கோயல், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.