சென்னை ராஜ் பவனில் வெகுஜன தன்னார்வ தூய்மை திட்டத்தை ஆளுநர் ஆர்.என்-ரவி தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “ராஜ் பவன் குடும்பத்தினருடன் சேர்ந்து ஆளுநர் மாளிகை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டேன்.
மக்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் தூய்மை திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியான இந்த அர்ப்பணிப்புள்ள வழக்கமான செயல்பாடு, தேசத்தின் தூய்மைக்கான உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது என ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.