தென்கொரிய விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து ஜிஜு ஏர் பிளைட் 7சி 2216 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இதில் 175 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் பயணம் செய்த நிலையில், தென்கொரியாவின் மூவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்தில் சிக்கியது.
பறவை மோதியதால் தரையிறங்கும் கியரில் கோளாறு ஏற்பட்டு விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 29 பேர் உயிரிழந்ததாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.