வடக்கு காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் 240 பேரை கைது செய்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு காசா பகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனையை, ஹமாஸ் தீவிரவாதிகள் தங்கும் இடமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து, அந்த மருத்துவமனையை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர். பின்னர், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை வெற்றியேற்றிவிட்டு தீயிட்டு எரித்தனர்.
மேலும், மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பதுங்கி இருந்த 240 ஹமாஸ் தீவிரவாதிகளையும் கைது செய்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.