பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற்றுக்கொள்ள ஜனவரி 9ம் தேதி முதல் டோக்கன் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதல் நாளில் காலை மற்றும் மாலை வேளையில் தலா 100 பேருக்கு டோக்கன் வழங்கவும், இதேபோல 2ம் நாள் முதல் காலை மற்றும் மாலை வேளையில் தலா 200 பேருக்கு டோக்கன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்பு பரிசுத்தொகுப்பினை வழங்கிடும் வகையில் டோக்கனில் தேதியை குறிப்பிடவும், கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் கடைகளில் போலீஸ் பாதுகாப்பு போடவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.