ஜனநாயக கட்சியான பாமகவில் காரசாரமான விவாதங்கள் நடப்பது இயல்புதான் என அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்த அன்புமணி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசியதாக தெரிவித்தார். சட்டப் பேரவைத் தேர்தல், ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்து ஆலோசித்ததாகவும், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறினார்.
பாமக பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது இயல்பு தான் என்றும், பாமக உட்கட்சி பிரச்னையை தாங்களே பேசி தீர்வு காண்போம் என்றும் அன்புமணி கூறினார்.