பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருஞ்சுனை, சிறுசுனை, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2000 ஏக்கர் பரப்பளவில் கரும்புகள் பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அந்த பரிசு தொகுப்பில் வழங்கப்படும் கரும்புகளை வியாபாரிகளிடமிருந்து கொள்முதல் செய்யாமல், நேரடியாக தங்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.