பாம்பை கையில் சுற்றியபடி காரில் பயணித்த யூடியூபர் டிடிஎஃப் வாசனின் வீடியோ வைரலான நிலையில் வனத்துறை அதிகாரிகள் விசாரணையை துவங்கியுள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போன யூடியூபர் டிடிஎஃப் வாசன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இணைய பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில் கையில் பாம்பை சுற்றிக்கொண்டு காரில் பயணிக்கும் விதமான காட்சிகள் இடம்பெற்றன. தான் முறையாக லைசன்ஸ் பெற்று பாம்பை வளர்ப்பதாகவும் டிடிஎஃப் வாசன் தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், லைசன்ஸ் பெற்றிருந்தாலும் பாம்பை துன்புறுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டது சட்டப்படி குற்றம் என தெரிவித்துள்ள வனத்துறையினர் இதுதொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர்.